Wednesday, February 6, 2013

கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல்-1



முதலில் நாம் Virtual PC என்றால் என்ன? இதன் பயன்பாடு என்ன? என்பதை அறிந்துகொள்வோம்.  Virtual PC என்பது ஒரு இலவச மென்பொருள் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் சட்டரீதியாக வெளியிடப்படும் ஒரு அப்பிளிக்கேசன். 


இது உங்களுடைய தனிப்பட்ட virtual machines யை உங்களுடைய இயக்க அமைப்பினுள் உருவாக்குவதற்கு உதவி செய்கின்றது. இந்த அப்பிளிகேசன் புதிய ஒபெரடிங் சிஸ்டங்களை பரிசோதித்து பார்பதற்கும், கணணியின் புதிய சூழல்களை கற்பதற்கும் பயன்படுகின்றது. இனி எவ்வாறு இதை கணணியில் நிறுவது என்று பார்ப்போம். 
முதலில் நீங்கள் இதை மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இருந்து Virtual PC யை தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இணையத்தளத்தினுள் நுழைந்த பிறகு நீங்கள் உங்களுடைய சரியான விண்டோஸ் 7 பதிப்பை தெரிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகே விண்டோஸ் Virtual PC யை செய்துகொள்ள வேண்டும். 






உங்களது சரியான விண்டோஸ் பதிப்பை தெரிவு செய்த பின்பு அது உங்களிடம் Virtual PC யை விண்டோஸ் மென்பொருள் மேம்பாடு (Windows software update) போன்று கணணியில் நிறுவச்சொல்லி கேட்கும்.






நிறுவுதல் (installation) செயல்பாடு முடிந்த பிறகு கணணியை நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க (Restart) வேண்டும். 




கணணி மீண்டும் ஆரம்பித்த பிறகு நீங்கள் விண்டோஸ் Virtual PC யை ஸ்டார்ட் மெனுவில் (Strat menu) காணலாம். அதனை தெரிவு செய்து, நிரலை (Program) திறந்துவிடுங்கள். 


பின்பு திறந்த புதிய விண்டோவில் "Create Virtual Machine " என்பதை  தெரிவு செய்து, அதில் virtual machine யை உருவாக்குங்கள். 


இப்போது உங்களுடைய புதிய Virtual Machine பெயரை குறியுங்கள், அத்தோடு எங்கே நீங்கள் உருவாக்கும் virtual machine கோப்புக்களை (Files) சேமிக்க போகிறீர்கள் என்பதை தோன்றும் நிரலில் கொடுக்கவேண்டும்.


அடுத்து வரும் விண்டோவில், நீங்கள் உங்களுடைய virtual machine யை நிறுவுவதற்கு எவ்வளவு RAM memory தேவை என்பதை தெரிவு செய்தல் வேண்டும்.  


அடுத்து தோன்றும் விண்டோவில், உங்களுடைய virtual ஒபெரடிங் சிஸ்டத்தை எங்கே நிறுவ வேண்டும் என்பதை தெரிவிக்க virtual நிலைவட்டு (Hard disk) ஒன்றை உருவாகவேண்டும். virtual நிலைவட்டயை கிழே காட்டப்படும் மூன்று வகையில் நிறுவிக்கொள்ளலாம். 

Dynamically expanding virtual hard disk 

Use an existing virtual hard disk 

Create a Virtual hard disk using Advanced options
இந்த செய்முறையில் நாங்கள் "Create a Virtual hard disk using Advanced options" என்ற வகையை தெரிவு செய்து தொடருங்கள்.


பின்பு திறக்கும் திரையில் "Dynamically expanding" முறையை தெரிவு செய்து வன் வட்டை (Hard disk) உருவாக்கிக்கொள்வோம். 


இப்போது நீங்கள் உங்களது Virtual hard drive வை எங்கே சேமிக்க போகிறீர்கள் என்றும் அதற்குரிய பெயரையும் தெரிவுசெய்து இடவேண்டும்.


அடுத்த தோன்றும் திரையில் நாங்கள் எவ்வளவு சேமிப்பு இடம் (Storage space) தேவை என்பதை கொடுக்கவேண்டும். 


முடிந்தது, தற்போது உங்களது virtual machine கணணியில் உருவாகப்பட்டு இருப்பதை அவதானிப்பீர்கள். அடுத்து, நீங்கள் ஒபெரடிங் சிஸ்டத்தை virtual machine னுள் நிறுவவேண்டும் அதற்கு நீங்கள் இங்கே கிளிக் செய்து பகுதி 2 யில் வாசித்து அறியுங்கள். கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல்-02 இங்கே படியுங்கள்.

courtesy:e-tamiltech

No comments:

Post a Comment